ஜூன், 2016 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஜூன் 2016

பெயர் சொல்லி அழைக்கப்பட்டிருக்கிறோம்

நான் அவர்கள் பெயர்களை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தேன். மாணவர் பட்டியலிலிருந்து அவர்கள் பெயர்களையும் புகைப்படங்களையும், பார்ப்பதில் நேரம் செலவிட்டு அவற்றை எனக்குப் பழக்கப்படுத்திக் கொண்டேன். எனவே அவர்கள் வகுப்பறைக்குள் நுழையும்பொழுது, “ஹலோ ஜெஸிகா” அல்லது “ட்ரெவோர் வரவேற்கிறேன்” என்று கூறுவேன். பெயர் சொல்லி ஒருவரை அழைப்பது எவ்வளவு அர்த்தமுள்ளது என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் உண்மையாகவே ஒருவரைப்பற்றி அறிய வேண்டுமானால் அவர் பெயரை மாத்திரம் அறிந்து கொண்டால் போதாது. அதற்கும் அதிகமாக அவர்களைப்பற்றி அறிய வேண்டியது உள்ளது. நல்ல மேய்ப்பனாகிய இயேசு, நம்மீது அன்பும்,…

நம் வாழ்க்கை முறை

இக்காலத்து வேதாகம மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கூறிய சொற்றொடரை, ஒருவர் மேற்கோள் காட்டிய பொழுது அதிர்ச்சிக்குள்ளானேன். “நம் வாழ்க்கை முறை” என்ற சொற்றொடரைப்பற்றி கூகுளில் நான் தேடிப்பார்த்த பொழுது, மக்கள் தாங்கள் எதிர்பார்த்த வாழ்க்கை முறைகள் அச்சுறுத்துபவைகளாக இருப்பதைத் தாங்கள் உணர்வதை மையமாகக் கொண்டே அநேக பதில்கள் கூகுளில் காணப்பட்டது. அவ்வாறு உணரப்பட்ட அச்சுறுத்தல்கள் சீதோஷ்ணநிலை மாற்றம், தீவிரவாதம், அரசாங்கத்தின் அரசியல் போக்கு ஆகியவை ஆகும்.

கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய, உண்மையில் நமது வாழ்க்கை முறை உண்மையில் எப்படிப்பட்டது? வசதியான, பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையா? அல்லது இன்னும்…

கடந்த காலத்தை பின்னால் விட்டுவிடல்

கிறிஸ் பேக்கர் பச்சை குத்தும் கலைஞர். அவர் பச்சை குத்தப்பட்டிருந்த வேதனையின் சின்னங்களையும், அடிமைத்தன சின்னங்களையும் கலைநயமிக்க சித்திரங்களாக மாற்ற வல்லவர். அவனிடம் வரும் வாடிக்கையாளர்களில் அநேகர் தீயவழியில் சென்ற கூட்டத்தினர், மனிதரைக் கடத்திச் செல்வதில் அடிமைப்பட்டவர்கள், இவர்களுக்கென அவர்களை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பெயர்களையும், சின்னங்களையும், குறியீடுகளையும் அவர்கள் கொண்டவர்கள். கிறிஸ் இப்படிப்பட்ட சின்னங்களை தன் கலைத் திறனால் மிகவும் அழகான உருவங்களாக்கி அவர்கள் தோல்மீது பச்சை குத்தினான்.

கிறிஸ்து பிறர் தோலின்மீது ஏற்படுத்திய மாற்றங்களைப்போல இயேசு நம் ஆத்துமாக்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.…

விலகிச் செல்லுதல் அல்ல

பள்ளி ஆண்டில் ஓரு பருவநிலை முடிந்த தருணத்தில் என் மனைவியும், நானும், 100 கிலோ மீட்டர் (60 மைல்) தூரத்திலுள்ள பள்ளியிலிருந்து எங்கள் மகளை அழைத்து வந்தோம். வீட்டிற்குத் திரும்பி வரும் வழியில், சற்று வழிவிலகிச் சென்று அருகாமையில் உள்ள கடற்கரை உணவு விடுதியில் சென்று சிற்றுண்டி அருந்தச் சென்றோம். எங்கள் நேரத்தை மகிழ்ச்சியுடன் கழித்துக் கொண்டிருந்த சமயத்தில், கடற்கரையில் அநேகப் படகுகளைக் கண்டோம். பொதுவாக அவை நீரில் அடித்துச் செல்லாதபடிக்கு நங்கூரமிடப்பட்டிருக்கும். ஆனால் ஓர் படவு மாத்திரம், எவ்விதத் தங்கு தடையுமின்றி மெதுவாக,…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஓய்வெடுக்க அனுமதி

சில கடற்கரை பாறைகளின் மேல் அமர்ந்தோம், நானும் என் நண்பன் சூசியும், பொங்கும் நுரைகளின் வழியே, கடல் நீர் சுருளையாகப் பொங்குவதைப் பார்த்தோம். பாறைகளில் ஒன்றன் பின் ஒன்றாக மோதும் அலைகளைப் பார்த்து சூசி, “எனக்குக் கடல் பிடிக்கும். அது ஓடிக்கொண்டே இருப்பதால், நான் நின்று பார்க்கலாம்" என்றார்.

நம் வேலையை இடைநிறுத்தி ஓய்வெடுக்க "அனுமதி" தேவை என்று நம்மில் சிலர் நினைக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமானது அல்லவா? சரி, அதைத்தான் நம் நல்ல தேவன் நமக்கு வழங்குகிறார்! ஆறு நாட்களுக்குத் தேவன், சுழலும் பூமி, ஒளி, நிலம், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களை உருவாக்கினார். ஏழாவது நாளில், தேவன் ஓய்வெடுத்தார் (ஆதியாகமம் 1:31-2:2). பத்து கட்டளைகளில், அவரை கனப்படுத்தக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கான விதிகளைத் தேவன் பட்டியலிட்டார் (யாத்திராகமம் 20:3-17), ஓய்வுநாளை ஓய்வுநாளாக நினைவுகூர வேண்டும் (வவ. 8-11) என்பது அதிலொன்று. புதிய ஏற்பாட்டில், இயேசு ஊரில் உள்ள அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்துவதைக் காண்கிறோம் (மாற்கு 1:29-34). பின்னர் மறுநாள் அதிகாலையில் ஜெபிக்க ஒரு தனியான இடத்திற்குச் செல்கிறார் (வச. 35). நம் தேவன் நோக்கத்துடன் வேலை செய்தார் மற்றும் ஓய்வெடுத்தார்.

வேலையில் தேவனுடைய உதவி, ஓய்விற்கான அவரது அழைப்பு என இரண்டுமே நம்மைச் சுற்றி ரீங்காரமாக இசைக்கிறது. வசந்த காலத்தில் நட்டால், கோடையில் வளர்ச்சியும், இலையுதிர்காலத்தில் அறுவடையும், குளிர்காலத்தில் ஓய்வும் உண்டாகும். காலை, நன்பகல், மதியம், மாலை, இரவு. தேவன் நம் வாழ்க்கையில் வேலை மற்றும் ஓய்வு ஆகிய இரண்டையுமே ஏற்படுத்தியுள்ளார்,  இரண்டையும் செய்ய அனுமதியும் வழங்குகிறார்.

ஆவிக்குரிய புதுப்பிப்பு

சீன மருத்துவத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முத்து துகள்களைச் சருமத்தில் தேய்ப்பது நடைமுறையில் உள்ளது, தோலின் மேற்புறத்தில் தங்கியிருக்கும் இறந்த திசுக்களை தேய்த்தெடுக்க தரையின் முத்துகளைப் பயன்படுத்துகிறார்கள். ருமேனியாவில், புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சைக்கு சேற்றைப் பிரபலமாகப் பயன்படுத்துகிறார்கள். சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் மாற்றும் வகையில் பரவலாகச் சேறை தேய்த்துக்கொள்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள மக்கள் உடல் பராமரிப்பு நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றனர், இது மிகவும் மந்தமான சருமத்தையும் புதுப்பிக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

எவ்வாறாயினும், நமது உடல்களைப் பராமரிக்க நாம் உருவாக்கிய கருவிகள் நமக்குத் தற்காலிக திருப்தியை மட்டுமே தர முடியும். முக்கியமானது என்னவென்றால், நாம் ஆவிக்குரிய ரீதியில் ஆரோக்கியமாகவும் வலிமையோடும் இருப்பதே. இயேசுவை விசுவாசிக்கும் நாம், அவர் மூலமாக ஆவிக்குரிய புத்துணர்வாகிய ஈவையும் பெற்றுள்ளோம். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார், "எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது" (2 கொரிந்தியர் 4:16). பயம், காயம் மற்றும் பதட்டம் போன்றவற்றைப் பிடித்துக் கொள்ளும்போது நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் நம்மைச் சோர்வடையச் செய்யலாம். நாம் "காணப்படுகிறவை அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்." (வச. 18) என்று நோக்கும்போது ஆவிக்குரிய புத்துணர்வு வருகிறது. நமது அன்றாட கவலைகளை தேவனிடம் ஒப்படைத்துவிட்டு, பரிசுத்த ஆவியின் கனியாகிய அன்பு, மகிழ்ச்சி மற்றும் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22-23 நம் வாழ்வில் புதிதாக வெளிப்பட வேண்டும் என்று ஜெபிப்பதின் மூலமாக இதை அடைகிறோம். நாம் நமது பிரச்சனைகளைத் தேவனிடம் விட்டுவிட்டு, அவருடைய ஆவியானவர் ஒவ்வொரு நாளும் நம் மூலம் பிரகாசிக்க அனுமதிக்கும்போது, அவர் நம் ஆத்துமாக்களை மறுசீரமைக்கிறார்.

திருப்தியை பற்றிக்கொள்ளுதல்

ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை கட்டுரையில், பிரெண்டா என்ற வாசகருக்கு அவர் பதிலளிக்கையில், அவள் தனது இலட்சியத்தை அடைய மேற்கொண்ட முயற்சிகள் அவளை அதிருப்தி அடையச் செய்ததாக புலம்பினாள். அதற்கான மருத்துவரின் பதில் அறிவுமழுங்கியதாக இருந்தது. மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கப் படைக்கப்படவில்லை, "உயிரோடிருந்து இனப்பெருக்கம் செய்வதற்கும் மட்டுமே" என்று அவர் கூறினார். திருப்தி எனும் கைக்கெட்டாத பட்டாம்பூச்சியைத் துரத்துவது நமது சாபம் என்றார். அதை எப்போதும் பிடிக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

மனநல மருத்துவரின் வார்த்தைகளைப் படித்து பிரெண்டா எப்படி உணர்ந்திருப்பாள்? அதற்குப் பதிலாகச் சங்கீதம் 131ஐப் படித்தால் அவள் எவ்வளவு வித்தியாசமாக உணருவாள்? என்று யோசித்தேன். அதன் வார்த்தைகளில், திருப்தியை எவ்வாறு கண்டறிவது என்பதை நமக்கு தாவீது காட்டுகிறார். அவர் மனத்தாழ்மையோடு ஆரம்பிக்கிறார், தனது ராஜரீகமான நோக்கங்களை ஒதுக்கி வைக்கிறார். மேலும் எது முக்கியமெனும் வாழ்க்கையின் ஆழமான கேள்விகளோடு போராடிக்கொண்டிருந்த அவர், அவற்றையும் ஒதுக்கி வைக்கிறார் (வச. 1). பின்னர் அவர் தேவனுக்கு முன்பாக தனது இதயத்தை அமரப்பண்ணினார் (வச. 2), எதிர்காலத்தை அவரது கைகளில் ஒப்படைக்கிறார் (வச. 3). அதின் விளைவு அற்புதமானது: "ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல இருக்கிறது" என்று அவர் கூறுகிறார். அதாவது "நான் திருப்தியாக இருக்கிறேன்" (வச. 2).

இதுபோன்ற நமது நொறுங்கிய உலகில், திருப்தி என்பது சில நேரங்களில் எட்டாக் கனியாக இருக்கும். பிலிப்பியர் 4:11-13 இல், அப்போஸ்தலன் பவுல் மனநிறைவைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று என்று கூறினார். ஆனால் நாம் "உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்" மட்டுமே படைக்கப்பட்டுள்ளோம் என்று நம்பினால், மனநிறைவு நிச்சயமாகப் பிடிக்க எட்டாக் கனியாகவே இருக்கும். தாவீது நமக்கு மற்றொரு வழியைக் காட்டுகிறார்: தேவனின் சமுகத்தில் அமைதியாக இளைப்பாறுதலின் மூலம் மனநிறைவைப் பெறுவதே அவ்வழி.